en kural
Wednesday, January 11, 2012
பயறு அதிசயம்
தமிழக அரசு பயறு வகை வளர்ச்சிக்காக தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் பயறு அதிசயம் என்னும் மருந்தினை பரிந்துரை செய்துள்ளது . ஆனால் விவசாயத்திற்கு முழுமுதல் தேவையான நீர் பாசன வசதிக்கு எந்த ஒரு திட்டமும் செயல்படுவதாக தெரியவில்லை . இப்பொழுது கூட முல்லை பெரியாறு அணையில் நீரை சேமிக்காமல் தமிழகத்தின் பால் திருப்பிவிட்டு இங்கிருக்கும் நதிகளிலும் ஏரிகளிலும் தடுப்பணைகள் கட்டி சேமிக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது . இருக்கும் ஏரிகளையும் கால்வாய்களையும் மற்றுமுள்ள நீராதாரங்களையும் தூர்வாரி பராமரித்தாலே நம்முடைய பாசன வசதிகளை பெருக்கிக்கொள்ளலாம் . நீராதாரங்களை மேம்படுத்தாமல் மருந்தும் மானியமும் எந்த அதிசயமும் செய்யாது .
Sunday, December 25, 2011
உணவு பொட்டலமிடுதல் சட்டம்
இந்த வருடத்தில் இருந்து உணவு கலப்படம் மற்றும் பொட்டலமிடுதல் சட்டத்தை மத்திய அரசாங்கம் தன் கையில் எடுத்துள்ளது. குடிசைத்தொழிலாக இருக்கும் சில உணவு பண்டங்களையும் பன்னாட்டு உணவு பண்டங்களை போலவே பொட்டலமிடுவதர்க்கும் கையாளும்படிக்கும் விதிமுறைகள் உள்ளன. இது நம் நாட்டு மக்களின் இயல்புக்கும் வியாபார நடைமுறைக்கும் எதிரானதாக உள்ளது. பன்னாட்டு வியாபாரிகளுக்கு உதவும்படியே இந்த சட்டம் உள்ளது. இந்த சட்டத்தின்படி அதிகாரம் பெற்றுள்ள அதிகாரிகள் கையூட்டு பெறுவதற்கு நல்வாய்ப்பாக உள்ளது.
Tuesday, May 31, 2011
கனிமொழி காவியம்
கனிமொழி ஈழத்திர்க்காகவும் தமிழக மீனவர்களுக்காகவும் போராடியா சிறைக்கு போனார்? கருணாநிதியின் குடும்பத்தினர் அவரை சிறையில் சென்று பார்த்த சோக கதைகளை விகடனில் படித்தபோது சந்தேகமாக இருந்தது . ஆனாலும் அவர்களெல்லாம் கஷ்டப்படுவதாக படித்தபோது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது . விகடன் எதற்கும் ஜாக்கிரதையாக இதை கையாள வேண்டும் . இதுவே அவர்களுக்கு மக்கள் மத்தியில் பரிதாப அலையை ஏற்படுத்தி விடும் . நம்முடைய மக்களையும் நம்ப முடியாது
Saturday, May 28, 2011
பள்ளிக்கல்வியில் அரசியல் விளையாட்டு
சமசீர் கல்வி வருமா வராதா. இதுலகூடவா அரசியல் விளையாடனும். பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது .
Sunday, May 15, 2011
தமிழ் நாடு தேர்தல் முடிவு
தமிழ்நாட்டு மக்கள் ஏதோ அதிமுக ஆட்சிக்காக வாக்களித்திருப்பதாக தலைமை நினைக்கலாம் ஆனால் அவர்கள் திமுக ஆட்சிக்கு எதிராகத்தான் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும்
Friday, April 8, 2011
அன்னா ஹஜாரே
அன்னா ஹஜாரேக்கு பின்நின்று ஆதரவு கொடுக்கும் இந்தியர்களை நம்பலாமா . எகிப்த நாட்டினைப்போல இங்கும் போராட்டம் வலுக்குமா அல்லது இதுவும் கடந்து போகுமா
Saturday, March 19, 2011
பக்தி தொடர்கள்
இன்றைய தேதியில் நாத்திகர்களை விட தொல்லைக்காட்சியில் வரும் பக்தித்தொடர்களே இந்து புராணங்களை அதிகமாக கிண்டல் செய்கின்றன
Subscribe to:
Comments (Atom)