இந்த வருடத்தில் இருந்து உணவு கலப்படம் மற்றும் பொட்டலமிடுதல் சட்டத்தை மத்திய அரசாங்கம் தன் கையில் எடுத்துள்ளது. குடிசைத்தொழிலாக இருக்கும் சில உணவு பண்டங்களையும் பன்னாட்டு உணவு பண்டங்களை போலவே பொட்டலமிடுவதர்க்கும் கையாளும்படிக்கும் விதிமுறைகள் உள்ளன. இது நம் நாட்டு மக்களின் இயல்புக்கும் வியாபார நடைமுறைக்கும் எதிரானதாக உள்ளது. பன்னாட்டு வியாபாரிகளுக்கு உதவும்படியே இந்த சட்டம் உள்ளது. இந்த சட்டத்தின்படி அதிகாரம் பெற்றுள்ள அதிகாரிகள் கையூட்டு பெறுவதற்கு நல்வாய்ப்பாக உள்ளது.