Saturday, March 19, 2011
பக்தி தொடர்கள்
இன்றைய தேதியில் நாத்திகர்களை விட தொல்லைக்காட்சியில் வரும் பக்தித்தொடர்களே இந்து புராணங்களை அதிகமாக கிண்டல் செய்கின்றன
Friday, March 18, 2011
தமிழகத்தில் அவசரநிலை
தேர்தல் கமிஷனின் கெடுபிடி லஞ்சம் வாங்குபவருக்கு நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது . கையில் சிறிது பணமிருந்தாலும் விடுவதில்லை , உதாரணமாக திருமணத்திற்கு நகைகள் துணிமணிகள் வாங்கச்செல்லும் பொதுமக்கள் அத்தாட்சி வைத்துக்கொண்டா அலைய முடியும் ? அதிகாரியை கவனிக்கிறாயா இல்லை அரசாங்கத்திற்கு கொடுக்கிறாயா என்று சிறிதும் இறக்கம் இன்றி வசூல் நடக்கிறது . என்ன மாதிரியான அத்தாட்சி என்றும் தெளிவு செய்ய வில்லை . அரசியல் கட்சிகளும் தேர்தல் மும்முரத்தில் இதையெல்லாம் கவனிப்பதுமில்லை (இல்லன்னாமட்டும்) . இப்பொழுது அரசியல் கட்சிகளை விட தேர்தல் கமிஷன் மீது தான் வெறுப்பாக உள்ளது . என்னை பொறுத்தவரை என்னுடைய எதிர்ப்பை காட்டும்விதமாக இந்த தேர்தலை பகிஷ்கரிக்கப்போகிரேன் . தமிழர்களை என்ன செய்தாலும் ஒன்றும் எதிர்க்கமாட்டார்கள் என்ற மனப்போக்கை நாம் ஒற்றுமையாக இருந்து அவர்களுக்கு காட்டவேண்டும் . இணையம் மூலமாகத்தான் எகிப்த போராட்டம் வெடித்தது . நம்முடைய இணைய பதிவாளர்கள் ஏதாவது செய்வார்களா ? சும்மா வெட்டித்தனமாக அரட்டை அடிக்காமல் உருப்படியாக ஏதாவது செய்தால் நல்லது
Subscribe to:
Comments (Atom)